வானதி சீனிவாசன் ஆவேசம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதியும், “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினார், ஆனால் தரவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை வெளியிடாவிட்டால் முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும். ரூபாய் 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி தந்ததாக ஊழலில் திளைத்த கட்சிகள் பொய் பரப்புகின்றன” என்று ஆவேசமாக கூறினார்.