வானிலை மையத்தின் மழை எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 18 முதல் தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜூன் 18ம் தேதி 14 மாவட்டங்களிலும் ஜூன் 19ம் தேதி 12 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 17ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யும். ஜூன் 18ம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.