“வாரிசு” பட 3வது சிங்கில்

Filed under: சினிமா |

நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தின் 3வது சிங்கில் பாடல் ரிலீசாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படத்தை தில்ராஜூ தயாரித்துள்ளார். படம் பொங்கல் பண்டிக்கையொட்டி நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்திற்குப் போட்டியாக உலகம் முழுதும் ரிலீசாகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் இசையில், விவேக் வரிகளில், பிரபல பாடகி கேஎஸ்.சித்ரா பாடியுள்ள#SoulOfVarisu என்ற 3வது சிங்கில் பாடலின் ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வாரிசு பட 3வது பாடலான #SoulOfVarisu – #VarisuThirdSingle இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும்.