வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவி வெண்கலப் பதக்கம்

Filed under: இந்தியா,விளையாட்டு |

ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வுக்ஸியில் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் இப்போட்டியில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64வது சுற்றில் பவானி தேவி பெற்றார். இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீராங்கனை பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.