“வா வாத்தி” பாடல் முழு வீடியோ ரிலீஸ்!

Filed under: சினிமா |

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வாத்தி” திரைப்படத்தின் பாடலான ‘வா வாத்தி’ மெலடி பாடல் பெரியளவில் ஹிட்டாகி உள்ளது.

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 17ம் தேதி வெளியானது. படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியானது. ரிலீஸூக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய அளவில் ஹிட்டான ‘வா வாத்தி ‘ பாடலின் முழு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.