“விக்ரம் வேதா” இந்தி திரைப்பட டீசர்!

Filed under: சினிமா |

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்திருந்தார். மேலும் இயக்குனர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். “விக்ரம் வேதா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஹிருத்திக்ரோசன் மற்றும் சயீப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள “விக்ரம் வேதா” படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி (நாளை) ரிலீசாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டீசர் 1 நிமிடம் 46 நொடிகள் இடம்பெற்றுள்ளது. இப்படமும் தமிழில் வெளியான “விக்ரம் வேதா” போல் விறுவிறுப்பாக இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.