விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் விரைவில் பரிபூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.