விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து விஜய் பாஸ்கரும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் அதிமுக வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.