விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன்; பிரசாந்த் கிஷோர்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு மவுசு அதிகமாகிவிடும். பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “விஜய்க்கு ஆலோசனை கூற மாட்டேன். அவரே என்னிடம் நேரில் வந்து விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக இருக்க மாட்டேன். ஆனால் அதே நேரத்தில் அவர் என்னை மதித்து நேரில் வந்தால் சில அறிவுரைகள் மட்டும் கொடுப்பேன்” என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.