விஜய்யின் அம்மா நடிகையின் பேட்டி!

Filed under: சினிமா |

சமீபத்தில் “வாரிசு” படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா “சலங்கை ஒலி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“சலங்கை ஒலி” திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு இயக்குனர் கே விசுவநாத் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் தேதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்குள் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க சென்று விட்டதால் “சலங்கை ஒலி” திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, “சலங்கை ஒலி” படத்தில் நான் நடிக்காததால் கே. விசுவநாத் அவர்களுக்கு என் மீது கோபம் இருந்தது. ஆனால் அந்த கேரக்டருக்கு ஜெயப்பிரதாதான் சரியான நடிகை என்பது அவருடைய அற்புதமான நடிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.