விஜய்யுடன் இணையும் வெங்கட்பிரபு!

Filed under: சினிமா |

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது விஜய், சினேகா, பிரசாந்த், மோகன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தி கோட்.” இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஷூட்டிங் கேரளா, சென்னை, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது “தி கோட்” திரைப்பட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய் விளையாடி மகிழிவும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இப்படத்தில் வெங்கட்பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் படத்திலும், 2006ம் ஆண்டு வெளியான சிவகாசி படத்திலும் வெங்கட்பிரபு நடித்திருந்தார். சில ஆண்டுகள் கழித்து வெங்கட்பிரபு விஜய் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.