விஜய் சேதுபதிக்கு என்ன பரிசு?

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், நடிகர் சூர்யாவுக்கு கார், துணை இயக்குனர்களுக்கு இரு சக்கர வாகனம் என்று உலகநாயகன் கமலஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார்.

ஜூன் 3ம் தேதி வெளியாக அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “விக்ரம்.” இத்திரைப்படம் பேன் இந்தியா அனைத்து ரசிகர்களிடமும் பேசப்பட்டு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. 5 நாட்களில் உலகளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குஷியான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு புதிய லெக்சஸ் கார், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு புதிய அபாச்சே பைக் என பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். படத்தில் கௌரவ தோற்றத்தில் சில நிமிடங்கள் தோன்றினாலும் தன் நடிப்பால் ரசிகர்களை ஆர்பரிக்க செய்தார் நடிகர் சூர்யா. இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் பெயர் ரோலக்ஸ் என்பதால் ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை இன்று நேரில் சந்தித்து அன்பளிப்பாக அளித்துத்தார் கமல்ஹாசன்.

இப்படி ஒவ்வொருவருக்கும் பரிசுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் கமலஹாசன், படத்தின் முக்கிய வில்லனான விஜய் சேதுபதிக்கு என்ன கொடுப்பார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் கொடுத்தவர், வில்லன் கதாப்பாத்திரமான சந்தானம் என்னும் விஜய் சேதுபதிக்கு என்ன கொடுப்பார் என ரசிகர்கள் தங்கள் யூகங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.