விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளாரா?

Filed under: சினிமா |

உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாற்று கதை படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் எம் எஸ் ஸ்ரீபதி இந்த படத்தை இயக்க உள்ளார்.

தற்போது மலையாள நடிகை ரஜிஷா விஜயன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.

ரஜிஷா விஜயன் இதற்கு முன்பே மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க இருப்பதை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.