விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

Filed under: சினிமா |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா ‘எனக்குப் பிடித்த நடிகர் விஜய், அவரது படத்தின் தலைப்பை எனது படத்தில் வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “குஷி.” ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு “குஷி” என்று பெயர் வைத்துள்ளது பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “விஜய் சாரின் “குஷி” படம் மிகப்பெரிய பிளாக் பஷ்டர், நடிகர் விஜய்யின் “குஷி” படத்தைப் போன்று இப்படத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்குப் பிடித்த நடிகர் விஜய். அவரது படத்தின் தலைப்பை எனது படத்தில் வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தலைப்புதான் ஒன்றே தவிர 2 படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.