விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

Filed under: தமிழகம் |

மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடித்த படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மதுரை ஆதினம் “நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது.” என்று கூறியுள்ளார். இவ்வாறாக நடிகர் விஜய் பற்றி மதுரை ஆதினம் கூறியிருப்பதற்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.