“நான் அரசியல்வாதி இல்ல.. போர்வீரன்!” கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நடிகர் விஜய் உள்ள படத்துடன் சேர்த்து ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வருடன் விஜய் உள்ள போஸ்டரை ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

 

ஏப்ரல் 13ம் தேதி படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு, போஸ்டர், பேனர்கள் போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். புதுச்சேரியில் விஜய்யின் “பீஸ்ட்” படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ள விஜய் ரசிகர்கள், அதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, விஜய் சந்தித்த புகைப்படங்களை வைத்துள்ளனர். அதற்கு அருகே “நான் அரசியல்வாதி இல்லை.. நான் போர்வீரன்” என்ற “பீஸ்ட்” படத்தின் வசனத்தையும் இடம்பெற செய்துள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.