விஜய் படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற நிறுவனம்!

Filed under: சினிமா |

பாலிவுட் ஆடியோ நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

“வாரிசு” திரைப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஐரோப்பா முழுமைக்குமான ரிலீஸ் உரிமத்தை சீசன்ஸ் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் கைப்பற்றியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.