விஜய் படத்தை இயக்கும் கோபிசந்த்!

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விஜய் அடுத்து அட்லி இயக்குவதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது இடைச் செருகலாக விஜய், தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி படத்தின் இயக்குனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.