விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

Filed under: அரசியல்,சினிமா |

இன்று நடைபெற்ற கல்வி விழாவில், “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை” என்று நடிகர் விஜய் பேசினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்” என தனது கருத்தை கூறியுள்ளார்.

நடிகர் விஜய் இன்று நடைபெற்ற கல்வி விழாவில் 10 நிமிடம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம், உங்கள் பெற்றோர்களையும் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்” என்று விஜய் கூறியிருந்தார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி, “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லது தானே கூறியிருக்கிறார். அதேபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் வர வேண்டும், யார் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறினார்.