விஜய் வழங்கும் இரண்டாம் கட்ட கல்வி விருது!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்டமாக நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர்.

விழாவில் அவர், “மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார். குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை” என்று பேசினார். இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையில் விஜய் வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று விஜய் 19 மாவட்ட மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குகிறார். 725 மாணவர்கள் உள்பட 3500 பேர் இவ்விழாவில் பங்கேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாணவர்கள் பெற்றோரை பேருந்துகள் மூலம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அழைத்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இன்றைய விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் விஜய் என்ன பேச உள்ளார்.