காவல்துறை அதிகாரிகள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை சிறப்பாக செய்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட உளவுப்பிரிவு, சைபர் கிரைம், கிரைம் பிராஞ்ச் காவல்துறையினருக்கு 15 பேருக்கு முதலமைச்சரின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை கால் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் இந்த சம்பவம் காவல்துறை குறித்து பாஜக கடும் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காவல்துறைக்கு முதலமைச்சர் விருது வழங்க போவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்ப...
தனிவாரியம் அமைக்க வேண்டும் - நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை!



