விஞ்ஞானிகள் திருப்பதியில் பிரார்த்தனை!

Filed under: இந்தியா |

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செயற்கைக்கொள் செலுத்த உள்ளதால் இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை செய்வதற்காக வந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நாளை இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளின் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் குழுக்கள் வந்து செயற்கைக்கோளின் மாதிரி வரைபடத்துடன் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் தரிசனம் செய்த விஞ்ஞானிகளுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம் மற்றும் வேத ஆசி வழங்கப்பட்டது. நாளை செலுத்தப்பட உள்ள செயற்கை கோள்கள் தற்போது கவுண்டன் தொடங்கியுள்ளதாகவும் புவி மற்றும் கடல்சார் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் உள்பட மொத்தம் 9 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.