“விடாமுயற்சி” கெட்டப்பில் அஜீத்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதற்கான வேலைகளில் மகிழ் திருமேனி முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என அஜீத்தின் ராசியான எழுத்தான “க்ஷி” லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்தது. தற்போது விடாமுயற்சி படத்தின் லுக்கில் மிரட்டலாக இருக்கும் அஜீத்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.