“விடுதலை” திரைப்பட லேட்டஸ்ட் தகவல்!

Filed under: சினிமா |

“விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

“விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். மார்ச் இறுதியில் ரிலீசாகுமென சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 31ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் எதையுமே இதுவரை படக்குழு தொடங்கவில்லை. அதனால் அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.