‘விடுதலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Filed under: சினிமா |

சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள “விடுதலை” திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக வடக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர். புரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் மார்ச் 31ம் தேதி முதலாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.