வினோத்துக்கு கரெக்‌ஷன் சொன்ன கமல்!

Filed under: சினிமா |

இயக்குனர் ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார்.

“துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப்பெற்றது. அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு படத்தை இயக்கும் வேலையில் உள்ளார் வினோத். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளதாகவும், அதற்கான பணிகளில் இப்போது வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கமல் “இந்தியன் 2” படத்தை ஜூலையில் முடித்ததும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. “துணிவு” படம் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப்பெற்ற நிலையில் அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு படத்தை இயக்கும் வேலையில் உள்ளார் வினோத். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளதாகவும், அதற்கான பணிகளில் இப்போது வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை ஜூலையில் முடித்ததும் ஆகஸ்ட் மாதத்தில் படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.