விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல!

Filed under: தமிழகம் |

பொதுமக்கள் விழுப்புரம் அருகே உள்ள கிணற்றில் மனித கழிவு கலந்ததாக புகார் கூறியிருந்தனர். அதில் மனித கழிவு கலக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

வேங்கை வயலில் கடந்த ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலந்ததாக பொதுமக்கள் புகாரளித்தனர். சில மர்ம நபர்கள் மனித கழிவை குடிநீர் கிணற்றில் கலந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கிணற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். கிணற்றில் விழுந்து கிடந்தது வெறும் தேனடை என்றும் மனித கழிவு உள்பட வேறு எதுவும் கலக்கவில்லை என்றும் உறுதி செய்தனர். மேலும் கிணற்றில் இருந்த நீர் சோதனை செய்யப்பட்டதாகவும் அது முற்றிலும் பாதுகாப்பாக குடிநீருக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.