விஷாலின் திரைப்பட போஸ்டர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

நடிகர் விஷாலின் “மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி.” இத்திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோசன் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அறிவித்தபடியே “மார்க் ஆண்டனி” படத்தின் மோஸன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.