விஷால் படத்தின் கதாநாயகி இவரா?

Filed under: சினிமா |

சமீபத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீசியன்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.