விஷால் – ஹரி கூட்டணி படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி. இவர் இயக்கிய “சாமி,” “ஆறு,” “சிங்கம்” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான “யானை” திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி. இதையடுத்து கடந்த மாதம் படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. இப்போது படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.