வெளிநாடுகளுக்கு பறக்கும் உலகநாயகன்!

Filed under: சினிமா |

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள “விக்ரம்” திரைப்படத்தின் புரமோஷன் மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்காக கமல்ஹாசன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “விக்ரம்.” கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படமாக “விக்ரம்” உருவாகி வருகிறது. 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பல இடங்களுக்கு கமல் புரமோஷன் பணிகளுக்காக செல்கிறார். விரைவில் இந்திய நகரங்களை முடித்துவிட்டு மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிபா ஆகிய இடங்களில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.