வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!

Filed under: சினிமா,தமிழகம் |

பிஸ்லெரி பாட்டிலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வெளியாகி படத்திற்காக புரொமோட் செய்யும் விதமாக வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி தனது வாட்டர் பாட்டிலில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் ஆகியோரது படங்களை அச்சிட்டு விநியோகித்துள்ளது. லிமிடட் எடிஷனாக இந்த தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.