ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

Filed under: சினிமா |

அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.

“ஜவான்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. தற்போது ஷாருக் கானின் “பதான்” படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் “ஜவான்” படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். ஜூன் 2ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதையடுத்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மீதமுள்ள 2 பாடல் காட்சிகளை இப்போது படமாக்கவுள்ளனர். இதில் ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா பங்கேற்க இப்போது மும்பையில் முகாமிட்டுள்ளார்.