ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படம்!

Filed under: சினிமா |

விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திர நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது ‘தங்கலான்’ திரைப்படம்.

இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷூட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வருகிறது. திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது “கேஜிஎப்” உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இத்திரைப்படம்தான் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படமாக ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதன் பின்னரே சூர்யா 42 படம் ரிலீசாகும் என சொல்லப்படுகிறது.