ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது புதுவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையையும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தையும் நடத்தி வருகின்றன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது அவர் தொகுதி மாற இருப்பதாகவும் அனேகமாக அவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் தான் ராகுல் காந்தியின் அப்பா ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பதும் அதனால் அந்த தொகுதியில் அவர் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்த போது அதில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் செல்வப்பெருந்தகை மூலம் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.