பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 62 பேர் பலி!

Filed under: இந்தியா |

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் சென்ற புதன்கிழமை இரவில் இருந்து, கள்ளச்சாராயம் குடித்தவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவது பின்பு இந்த மூன்று மாவட்டத்தில் 40க்கும் மேல் உள்ள இடங்களில் பஞ்சாப் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இதுவரை 8 பேரை கைது செய்து உள்ளனர்.

மேலும், பல பேரல்கள் மற்றும் கேன்களில் இருந்த கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.