ஸ்ருதிஹாசனின் சினிமா பயணம்!

Filed under: சினிமா |

நடிகை, பாடகி என சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்.

“7ம் அறிவு” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து “3”, “புலி”, “வேதாளம்” உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். “கேஜிஎப்” திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடியாக “சலார்” என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த செய்தியை அவரது சமூக வலைதள பக்கத்தில் “நான் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் ரசிகர்களுக்கும், அவர்கள் எனக்கு அளித்துள்ள அன்பிற்கும் எனது பணிவான நன்றி” என பதிவிட்டுள்ளார்.