ஹாலிவுட் தரத்தில் “கங்குவா”

Filed under: சினிமா |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா.” சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க மும்பை சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. எனவே இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல் ராஜா பேட்டியில் “கங்குவா” படம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும். “கங்குவா” ஒரு சிறப்பான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இது ஃபேண்டசியுடன் கூடிய வழக்கமான ஆக்சன் படம் மற்றும் பிரம்மாண்ட மேக்கிங் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். திரைப்படத்தில் நிறைய விஎஃப்.எக்ஸ் காட்சிகள் இருப்பதால் இது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.