ஹேஸ்டேக் டிரெண்டிங்கால் ஷாருக்கானின் படம் பாதிக்குமா?

Filed under: சினிமா |

ஷாருக்கான் நடிப்பில் “டான் 3” உருவாக வேண்டுமென ரசிகர்கள் DON-3 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் தற்போது, “பதான்” திரைப்படத்தில், ஜான் ஆபிரகான், தீபிகா படுகோனே ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதேபோல், அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில் நயன்தாரா ஆகியோருடன் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான்” படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது. ஷாருக்கான் நடிப்பில், கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் “டான்.” இப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படத்தின் டானாக ஷாருக்கான் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அடுத்த பாகத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.