சமீபத்தில் கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் நடிகர் அஜித்.
சமீபகாலங்களாக அஜித் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் வகையில் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.
இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அஜித் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது சம்பந்தமாக வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஜித் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவருக்கு அஜித் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியதாக புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.