தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. விசுவாசம் படம் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது மற்றும் நேர்கொண்ட பார்வை படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக எடுக்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்கிற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கு முன்பே யுவன் நேர்கொண்டபார்வை படத்தில் இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் வினோத் அவர்களின் பிறந்தநாளுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனடியாக ரசிகர் ஒருவர் தலைவா படத்தின் அப்டேட் சொல்லுங்க என யுவன் இடம் கேட்டிருந்தார். அதற்கு யுவன் விரைவில் அப்டேட் வரும் பதிவிட்டார்.