அஜீத்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜீத்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” இவ்வாண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்றாகும். பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் “வாரிசு” படத்துடன் இப்படம் மோதவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அஜீத்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் ஜனவரி 17ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி குறுகிய காலத்தில் அதாவது மே மாதத்திற்கு மொத்த படப்பிடிப்பும் முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இவ்வாண்டில் அஜீத்தின் 2 படங்கள் வெளியாகவுள்ள மகிழ்ச்சியில் அஜீத்தின் ரசிகர்கள் உள்ளனர்.