லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு – அசத்தலான டைட்டில்!

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினாலும் தற்போது வரை திரையரங்குகள் திறக்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகள் திறந்த பின்பு வெளியாகும் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் படத்தின் டைட்டிலும் வெளியாகியது. அந்த படத்திற்கு “எவனென்று நினைத்தாய்” டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.