அஜீத்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Filed under: சினிமா |

“துணிவு” திரைப்படத்தின் மூலம் அஜீத் தனது 61வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முடிவதற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறத. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திரிஷா அஜீத்துடன் “கிரீடம்,” “என்னை அறிந்தால்” உட்பட பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா தளபதி 67 படத்தில் விஜய்யுடனும் நடிக்கவுள்ளார்.