அஜீத்துடன் இணைந்த பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது.

ஷூட்டிங்கில் அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து துபாயில் அடுத்த கட்ட ஷூட்டிங்கும் அதன் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு அங்கு முக்கியமான காட்சிகளையும் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆரவ் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் தற்போது ஷூட்டிங் நடக்கும் அஸர்பைஜானுக்கு சென்றுள்ளார். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.