லைகா நிறுவனம் அஜீத் 62வது திரைப்படத்தின் அப்டேட் பற்றிய பதில் அளித்துள்ளது.
நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அஜித் 62வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜீத் 62வது திரைப்பட அப்டேட் எப்போது வரும் என அஜீத் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இதுபற்றி லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் சமீபத்தில் அப்டேட் ஒன்றை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும்போது வெளியிட்டுள்ளார். அதில் “நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்” எனக் கூறியுள்ளார்.