அஜீத் மற்றும் விஜய் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்டேட்!

Filed under: சினிமா |

வருகின்ற ஜனவரி 11ம் தேதியன்று அஜீத்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாக உள்ளன.

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் இத்திரைப்படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோ எப்போது திரையிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். “துணிவு” திரைப்படத்துக்கு அதிகாலை 1 மணிக் காட்சிகளும், “வாரிசு” திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.