விக்னேஷ் சிவனின் பாராட்டு!

Filed under: சினிமா |

இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’மகுடம் -என்று பாராட்டியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” படத்தைப் பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் “வாசிப்பு அனுபவத்தின் உச்சமான ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேறியுள்ளது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கலை என அத்தனை பரிணாமங்களிலும் உச்சம் தொட்ட இத்திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’மகுடம்.” என்று பதிவிட்டு பாராட்டியுள்ளார்.