புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனரை வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
அஜீத்தின் ரசிகர்கள் அவரது 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்ட போதிலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜீத்குமார். நேற்று அஜீத்குமாரின் 30 ஆண்டு கால திரையுலக பயணம் கொண்டாடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்ட் செய்து வந்தனர். அஜீத்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த பிரெஞ்சுசிட்டி அஜீத் ரசிகர்கள் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவ் அடித்து சென்று அஜீத்குமார் பேனரை வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.