அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு
தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, இன்று சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்
Related posts:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக...
அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!
நிதி நிறுவனங்களில் ரூ.170 கோடி சொத்துக்கள் பறிமுதல்!
திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ...


